ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மற்றும் கோவை விழா இணைந்து சித்திரம் பேசுதடி எனும் இந்திய நாட்டுப்புற, பழங்குடியினர், சுவர் ஓவியக் கண்காட்சியை சனிக்கிழமை காலை 11:00 மணி முதல் மாலை 8:00 மணி வரையில் ஸ்ரீ லட்சுமி மில்ஸ் அர்பன் சென்ட்ரில் நடத்தவுள்ளது.

இந்நிகழ்வை குருவாயூர் தேவஸ்வம் நிறுவனம் சுவரோவியம் முதல்வர் (ஓய்வு) டாக்டர். கே.யு. கிருஷ்ண குமார் நிர்வகிக்க உள்ளார்.

இதில், பீகார் மதுபானி கோட்னா ஓவியம், ஆந்திரப் பிரதேசம் கலம்காரி ஓவியம், வ.வங்காளம் காளி காட் ஓவியம் பட சித்ரா, மத்திய பிரதேசம்

கோண்ட் ஓவியம், ஒடிசா சௌரா ஓவியம், குஜராத் பித்தோரா, மாதானி பச்சேடி, ஹிமாச்சல பிரதேசம் காங்க்ரா ஓவியம் என பல இந்தியாவின் முன்னணி கலைஞர்கள் இந்தியா முழுவதிலுமிருந்து வெவ்வேறு பாணிகளில் தங்கள் படைப்புகளை வழங்க உள்ளனர்.

கலை ஆர்வலர்கள், கட்டிடக் கலைஞர்கள், உள்துறை வடிவமைப்பாளர்கள் மற்றும் மாணவர்களுக்கான கலை கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள இது ஓர் அரிய சந்தர்ப்பம். அனுமதி இலவசம்.