மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 38 வது நினைவு நாள் முன்னிட்டு அவிநாசி சாலையில் உள்ள எம்ஜிஆர் திருவுருவச் சிலைக்கு கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் அம்மன் கே அர்ஜுனன் MLA., தலைமையில் கழக அம்மா பேரவை இணைச் செயலாளர், கோவை மாநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் கே.ஆர்.ஜெயராம் MLA., முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதில் முன்னாள் அமைச்சர் செமவேலுச்சாமி, சிங்கை ராமச்சந்திரன், சிங்கைமுத்து, பீளமேடு துரைசாமி, பார்த்திபன், லீலாவதி உன்னி, ASமகேஸ்வரி, CTCஜப்பார், புரட்சித்தம்பி, சிங்கைபாலன், சிங்கைவசந்தி, போன்ஸ் பொன்னுச்சாமி மற்றும் வார்டு கழகச் செயலாளர்கள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாவட்ட, பகுதி, வட்ட கழக, சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்கள்  கலந்து கொண்டனர்.