அம்ருதா விஸ்வ வித்யாபீடம், வால்வோ குரூப் இந்தியா பிரைவேட் லிமிடெட் உடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் அண்மையில் நடைபெற்றது. இந்த ஒப்பந்தம் மூலம் மாணவர்களுக்கு தொழில் சார்ந்த அனுபவத்தை வழங்குவதற்காக, தொழில்த் துறையினில் அவர்களை நன்கு தயார்ப்படுத்துவதை இந்த முயற்சியானது உறுதி செய்கின்றது.

இந்த கூட்டாண்மையானது, இரண்டு முதல் நான்கு செமஸ்டர் கிரெடிட் அடிப்படையிலான திட்டத்தை துவங்குவதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. இது தொழில் துறையை மையமாகக் கொண்ட பாடங்களை வலியுறுத்துவது மட்டுமல்லாது தொழில் துறையில் திறமையான நிபுணர்களை உருவாக்குகின்றது. நன்கு தேர்ச்சிபெற்ற ஆசிரியர்கள் மற்றும் நிபுணர்களின் மூலம், மாணவர்களை தயார்ப்படுத்துவதில் வால்வோ முக்கிய பங்கு வகிக்கின்றது.

பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ள தொழில்நுட்பங்களை கற்பிப்பதில் அம்ருதாவின் ஆசிரியர்களுக்கு வால்வோ பயிற்சி அளிப்பதன் மூலம், அவர்களின் பொறியியல் சார்ந்த திறமைகளை வளர்த்துக்கொள்ள உதவுகின்றது. ஆட்டோமொபைல் உலகிற்கு வரும் அத்தகைய பெண்கள் வாகன வல்லுனர்களாவதற்கு உதவித்தொகையும் வழங்கப்படுவது மட்டுமல்லாது பல்வேறு தொழில்முறை சவால்களை எதிர்கொள்ளும் வகையில் நடைமுறை திறன்களை வளர்ப்பதில் இந்த பெண்களுக்கு பயிற்சியும் அளிக்கப்படும்.

இந்த ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தைக் குறித்து, அம்ருதா விஸ்வ வித்யாபீடத்தின் கல்வி மற்றும் தொழில் துறை கூட்டாண்மையின் இயக்குனர் சுரேஷ் கோடூர் கூறுகையில், “இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், கல்விசார் சிறப்பை தொழில்துறை பொருத்தத்துடன் ஒருங்கிணைப்பதில் அம்ருதாவின் கண்ணோட்டத்தைப் பிரதிபலிக்கின்றது. வோல்வோ குழுவுடன் இணைந்து பணியாற்றுவது, எங்கள் மாணவர்களின் தொழில்துறை திறன்களை மேலும் ஆழமாக்குவது மட்டுமல்லாது வாகனத் துறையின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகுக்கின்றது.

இந்த ஒத்துழைப்பு மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்குவது மட்டுமல்லாது ஆராய்ச்சி சார்ந்த கல்வியையும் ஆதரிக்கின்றது. வோல்வோ குழு ஊழியர்களுக்கு அம்ருதாவுடன் உயர் படிப்பு மற்றும் ஆராய்ச்சி ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளுக்கும் வழிவகுக்கின்றது.” என்றார்.

வால்வோ குரூப் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் கமல் பாலி கூறுகையில், “இந்த ஒப்பந்தம் கல்வி மற்றும் தொழில்துறையை ஒன்றிணைத்து எதிர்காலத்தில் திறமையான பணியாளர்களை உருவாக்குவது மட்டுமல்லாது அம்ருதா போன்ற பல்கலைக்கழகங்களுடன் இணைந்து பணியாற்றி வரும் கால தலைமுறையின் பொறியாளர்களை தயார்ப்படுத்த உதவுகின்றது. இம்முயற்சியானது வாகனத் துறையில் புதுமை மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றது.” என்றார்.