கோவை சரவணம்பட்டி எஸ்.எம்.எஸ்.திருமண அரங்கில் நடைபெற்ற தமிழ்நாடு பிசியோதெரபி டாக்டர்கள் அசோசியேசன் சார்பில், பிசியோதெரபி டாக்டர்கள் கருத்தரங்கம் மற்றும்,சிறப்பாக மருத்துவசேவை செய்த பிசியோதெரபி டாக்டர்களுக்கு “PHYSIO ARAISE – 2024” “டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் விருதுகளை கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் ex.எம்எல்ஏ., கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து, சிறந்த மருத்துவ சேவை செய்த பிசியோதெரபி டாக்டர்களுக்கு, “டாக்டர்.ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் விருதுகளை” வழங்கி, வாழ்த்தி, சிறப்புரையாற்றினார். உடன் தமிழ்நாடு பிசியோதெரபி டாக்டர்கள் சங்கத்தின் மாநில தலைவர் டாக்டர் வி. ராஜா செல்வகுமார்,சங்கத்தின் மாநிலச் செயலாளர் டாக்டர். ராஜேஷ் கண்ணன்,முத்தூஸ் மருத்துவமனை M.D.டாக்டர்.முத்து சரவணன் உள்ளிட்டோர்.