நவராத்திரி பூஜையை முன்னிட்டு, தென்மாவட்ட மாநாட்டு வகுப்பு தமிழ் விஸ்வகர்ம சார்பில் திருவிளக்கு பூஜை அசோக் நகரிலுள்ள மீட்டிங் மஹாலில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் 108 திருவிளக்குகளை கொண்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. ஸ்ரீ வாராஹி அம்மன் அழகிய சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ஸ்ரீ அய்யனார் ஆதீனம் குருமகா சன்னிதானம் ஸ்ரீனிவாச சுவாமிகள் கலந்து கொண்டு அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்தார். பின்னர் பூஜையில் பங்கேற்ற பெண்களுக்கு சேலைகள் வழங்கினார்.

இந்த நிகழ்வினை அப்பாவு ஆச்சாரி, அய்யாதுரை ஆச்சாரி, பசுவை நாகராஜன் ஆச்சாரி, கடம்பூர் சீனிவாசன் ஆச்சாரி, மருதன் ஆச்சாரி மற்றும் தனசேகரன் ஆச்சாரி ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
