இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பந்தயக் கார்களுக்கெனப் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட உயர் ஹெக்டேன் எரிபொருள் ஸ்டோர்ம் எக்ஸ்-ஐ அறிமுகம் செய்தது.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சந்தைப்படுத்துதல் இயக்குநர் சதீஷ்குமார், பைப்லைன்கள் இயக்குநர் செந்தில்குமார், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவின் இயக்குநர் அலோக் வர்மா ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மேல்நிலை மோட்டார் பந்தய கார்களுக்கான மேம்படுத்தப்பட்ட பந்தய எரிபொருளை அறிமுகம் செய்துள்ளது.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தலைவர் ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா வின் ஆலோசனையின்பேரில், பந்தயப் பொருளின் சின்னமாக இந்தியன் ஆயில் இருக்க வேண்டும் என்ற நோக்கில் புதுமையாகவும் சிறப்பாகவும் இந்த எரிபொருள் வெளியிடப்பட்டுள்ளது.
பரிதாபாத்தில் உள்ள இந்தியன் ஆயில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் புதிய பந்தய எரிபொருளை மேம்படுத்தியுள்ளது. மிக உயர்ந்த தரமான ஆக்டேன் எரிபொருள் பெட்ரோலுடன் பானிபட் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து 2ஜி எத்தனாலும் சேர்க்கப்படுகின்றன. சர்வதேச ஆட்டோமெபைல் கூட்டமைப்பின் 2024-ம் ஆண்டுக்கான நிர்ணயத்தின்படி இந்த எரிபொருளுக்கு துபாயில் உள்ள வெரிடாஸ் கழகம் சான்றிதழ் வழங்கியுள்ளது.
இந்திய தேசிய சாம்பியன்ஷிப் 3-வது மற்றும் 4-வது சுற்றில் பங்கேற்கும் வாகனங்களில் பயன்படுத்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனும் மெட்ராஸ் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப்பும் இணைந்து செயல்படுகின்றன. பந்தயத் துவக்க விழாவிற்கு 3-வது சுற்றுத் துவக்க விழாவின்போது 55 பேரல் எரிபொருள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பிரதீப் சுத்திகரிப்பு நிலையம் அதிநவீனத் தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டது. இது, புதிய பந்தய எரிபொருளை மேம்படுத்துவதில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தியன் ஆயில் நிறுவனம் புதியவைகளை கண்டுபிடித்தல், நிலைத்தன்மை மற்றும் வாடிக்கையாளர்களுக்கான திருப்தி போன்றவைகளைத் தொடர்ந்து கடைபிடிக்கிறது. இதுவே இந்தியாவின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் பேருதவியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.