பரிக்ஷா பே சர்ச்சா 2025 நிகழ்வில், பிரதமர் நரேந்திர மோடியுடன் மாணவர்களுக்காக உரையாற்றிய சத்குரு, தேர்வுகள் மட்டுமின்றி வாழ்க்கையின் பல்வேறு நிலைகளையும் எளிதாக எதிர்கொள்ள யோகப் பயிற்சிகள் உதவுமென்று வலியுறுத்தினார்.
மாணவர்கள் எதிர்கொள்ளும் அழுத்தமான சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, பிரதமரின் இந்த முயற்சியை அவர் பாராட்டினார். கல்வி என்பது தேர்வுகளை மட்டும் கடப்பதற்கல்ல, வாழ்க்கையை அறிவுடன் அணுக உதவும் அடிப்படை என்பதை மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.
மாணவர்கள் மனதில் எழும் கவலைகளை குறைப்பதற்கும், அதிகமான மனக்குழப்பத்தை சமாளிப்பதற்கும் யோகா ஒரு சிறந்த வழி எனத் தெரிவித்த அவர், “நாத யோகா” எனும் எளிய யோகப் பயிற்சியை மாணவர்களுக்காக வழங்கினார். வெறும் 7 நிமிடங்கள் தினமும் இந்த பயிற்சியை செய்தால் மனதில் அமைதி கிடைக்கும் என்றும், இது இணையத்தில் இலவசமாக கிடைப்பதாகவும் தெரிவித்தார்.