கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி மற்றும் நிருத்ய சாதனா நாட்டியாஞ்சலியுடன் இணைந்து, உலக சாதனை நிகழ்வான நடராஜர் பல்லக்கு நிகழ்வை அண்மையில் நடத்தியது.

300-க்கும் மேற்பட்ட பாரம்பரிய நடனக் கலைஞர்களின் பங்கேற்புடன், நடராஜப் பெருமாளை போற்றும் வகையில் கே.பி.ஆர். கலை கல்லூரியின் ரோட்ராக்ட் கிளப் சார்பில் விருக்ஷா புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸில் உலக சாதனை படைத்திருக்கிறது.

இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியம், ஒற்றுமை மற்றும் எண்ணற்ற கலைஞர்களின் ஆர்வத்தை ஒன்றிணைத்து இந்த சாதனை நிகழ்வு நடைபெற்றுள்ளது. சிறப்பு விருந்தினராக பாரதி புரஸ்கார் மயிலிறகு சுந்தர்ராஜன், விஜிஎம் காஸ்ட்ரோ சென்டரின் டாக்டர் சுமன், பிரேமிகா டிரஸ்ட் நிறுவனர் மீனா, கே.ஜி.எஃப் (கலங்கல் கிரீன் பவுண்டேஷன்) நிறுவனர் பாபு மற்றும் கே.பி.ராமசாமி ஆகியோர் பங்கேற்று நிகழ்வை சிறப்பித்தனர்.