கோவை, ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ரத்தினவாணி சமூக வானொலி 90.8 சார்பில் 24 மணி நேரம் தொடர்ந்து மூன்று முக்கிய நிகழ்வுகளை இடைவிடாமல் நடத்தியதால், ரத்தினவாணி சமூகவானொலி உலக சாதனை படைத்துள்ளது.

ரத்தினம் கலை கல்லூரியில் கடந்தாண்டு செப்டம்பர் 3, 2024 அன்று, காட்சி தகவல் தொடர்பியல் துறை, ஆடை வடிவமைப்பு துறை மற்றும் ஆங்கிலத் துறையின் ஒத்துழைப்புடன், ரத்தினவாணி சமூகவானொலி 90.8 ஒருங்கிணைப்பில், 24 மணி நேரம் தொடர்ந்து, 100 சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் குறும்படங்களை திரையிடல், 120க்கும் மேற்பட்ட மாடல்கள் பங்கேற்ற கைத்தறி ஆடை ஃபேஷன் ஷோ மற்றும் 60க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற ஆங்கிலக் கவிதை வாசிப்பு ஆகிய நிகழ்ச்சிகளை இடைவிடாது நடத்தியதால் ரத்தினவாணி சமூகவானொலிக்கு அதிகாரப்பூர்வ உலக சாதனையை பெற்றது.

மார்ச் 28, 2025 அன்று நடைபெற்ற ஆண்டு விழாவில், ரத்தினவாணி சமூகவானொலியின் இயக்குநர் மகேந்திரன், காட்சி தகவல் தொடர்பியல் துறையின் தலைவர் சதீசானந்தன், ஆடை வடிவமைப்பு துறையின் தலைவர் தன்வி, ஆங்கிலத் துறையின் தலைவர் சாரதா மற்றும் மாணவர் விவகாரத் துறை டீன் ராஜு ஆகியோருக்கு அகில இந்திய புத்தக சாதனையின் நிறுவனர் வெங்கடேசன் மற்றும் செயலாளர் கலைவாணி ஆகியோரால் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில், ரத்தினம் கல்வி குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் செயலாளர் மணிக்கம், ரத்தினம் கலை கல்லூரியின் முதல்வர் பாலசுப்ரமணியம், துணை முதல்வர் சுரேஷ், தேர்வுகள் கட்டுப்பாட்டு அலுவலர் தினகரன், நிர்வாக அலுவலர் பூமிநாதன் மற்றும் ஆராய்ச்சி டீன் டாக்டர் சபரீசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தன