கோவையில் பாரா ஒலிம்பிக் பல் உள்விளையாட்டு வளாகம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
கவுண்டம்பாளையம், ஜீவா நகர் பகுதியில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் சுமார் 1.10 ஏக்கர் பரப்பளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கும் வகையில் உலகத்தரம் வாய்ந்த பாரா ஒலிம்பிக் பல் உள்விளையாட்டு வளாகம் அமைக்கும் பணியினை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
இந்த வளாகத்தில், உடற்பயிற்சிக் கூடம், ஆண், பெண் ஆகியோர்களுக்கான தனித்தனியான இருப்பு அறைகள் மற்றும் கழிப்பறைகள், யோகா மையம், முதலுதவி சிகிச்சை மையம், பார்வையாளர்கள் அமரும் பகுதி, உணவுக்கூடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கூடிய சர்வதேச தரத்திலான விளையாட்டு வளாகம் அமைய உள்ளது.

