கோயம்புத்தூர் மாநகராட்சியின் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்தியம் என 5 மண்டலங்களுக்குட்பட்ட விடுபட்ட வார்டு பகுதிகளில் எல்.இ.டி தெரு விளக்குகள் அமைக்கும் பணி துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

ரூ.4.41 கோடி மதிப்பீட்டில் மொத்தம் 1927 எண்ணிக்கையிலான எல்.இ.டி. தெரு விளக்குகள் அமைக்கும் பணியை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் உடன் இனைந்து கோவை கலெக்டர் பவன்குமார் துவக்கி வைத்தார்.

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டலத்தில் ரூ.90 லட்சம் மதிப்பீட்டில், 622 தெரு எண்ணிக்கையிலான எல்.இ.டி.தெரு விளக்குகளும், மேற்கு மண்டலத்தில் 176 ல்.இ.டி. தெரு விளக்குகளும், வடக்கு மண்டலத்தில் 549 எல்.இ.டி. தெரு விளக்குகளும், தெற்கு மண்டலத்தில் 360 எல்.இ.டி. தெரு விளக்குகளும் மத்திய மண்டலத்தில் 220 எல்.இ.டி. தெரு விளக்குகளும் பொறுத்தப்படவுள்ளன.

இந்த பணிகளை விரைவாக மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலருக்கு பாராளுமன்ற உறுப்பினரும் கோவை கலெக்டரும் உத்தரவிட்டனர்.