ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் சித்ரா தலைமை தாங்கினார்.
பிவிஆர் ஃபுட்ஸ் அமைப்பின் நிறுவனர் சுபத்ரா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, தொழிலதிபராகத் தன் வாழ்வில் பெற்ற அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். பெண்கள் தங்களது திறமைகளைக் கல்லூரிப் பருவத்திலேயே கண்டறியவும், வளர்த்துக் கொள்ளவும் பயிற்சி பெற வேண்டும் என்று குறிப்பிட்டார்.
மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகள், ஆசிரியர்கள், பணியாளர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
