சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண்களின் ஆரோக்கியம் மற்றும் முன்னேற்றத்தை வலியுறுத்தி கோவை மெடிக்கல் சென்டர் மற்றும் மருத்துவமனை சார்பில் கோவையின் பல்வேறு இடங்களில் பிரம்மாண்ட கையெழுத்து இயக்கம் நடைபெற்றது

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் கோவை ரயில் நிலையத்தில் சனிக்கிழமை தொடங்கின. கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் கீதாஞ்சலி மற்றும் ரயில் நிலைய இயக்குனர் பழனியப்பன் ஆகியோர் கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை உயரதிகாரிகள் முன்னிலையில் இதனைத் துவக்கி வைத்தனர். மார்கெட்டிங் மற்றும் மக்கள் தொடர்பு துறை துணை தலைவர் நாராயணன் ஹெல்த் செக் அப் கூப்பன் வழங்கினார்.

பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் ஆர்வத்துடன் இதில் பங்கேற்று, தங்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்போம் என உறுதிமொழி எடுத்து கையெழுத்திட்டனர்.
