கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் வணிகவியல், மேலாண்மையியல் மற்றும் உயிரி அறிவியல் துறை முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்வு விழா நடைபெற்றது.
கல்விக்குழுமங்களின் தலைவர் வசந்தகுமார் பேசுகையில்: மாணவர்கள் சுய பொறுப்புணர்வுடன் சமுதாயப் பொறுப்புணர்வும் உடையவர்களாக வளர வேண்டும். இங்கு பெறும் கல்வியால் சமுதாயத்திற்கு சிறந்த குடிமக்களாகவும் சேவை புரிய தங்களை உயர்த்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
விழாவில் சென்னை ஹெச்.சி.எல். தொழில்நுட்ப மையத்தின் கேம்பஸ் ரிலேசன்ஸ் இயக்குநர் – தலைவர், பிரசாத் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசுகையில்: இளம்தலைமுறை மாணவர்கள், புதியவற்றைக் கண்டறிவதில் ஆர்வமும், தெளிவான செயல்திட்டமும், திடமான நம்பிக்கையும், தொடர் முயற்சியும் கொண்டு வளமான எதிர்காலத்தை அமைத்துக் கொள்ளலாம். தாழ்வு மனப்பான்மையை ஒழித்து, மனவுறுதியுடன் சிறந்த ஆளுமையாக விளங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
விழாவில் முதன்மைச் செயலர் முருகையா, துணைவேந்தர் சுப்பன் ரவி, பதிவாளர் பிரதீப் கற்பகம், பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
