கோவை மாநகரில் கடந்த சில நாட்களாகவே வெயில் கொளுத்தி வருகிறது. எப்போதுதான் கோடை மழை கோவையின் சூட்டை சற்று தணிக்கும் என மக்கள் எதிர்பார்த்து காத்துவருகின்றனர்.
இந்த வாரம் (30.3.26 – 4.4.26) கோவை மாநகரில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்து கோவையை சேர்ந்த வானிலை ஆய்வாளர் சுஜய்-யிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-
கோவை மாநகரில் இந்த வாரம் செவ்வாய் வரை 37° செல்ஸியஸ் வெப்பம் பதிவாகும். அதன் பின்னர், 1° குறைந்து புதன், வியாழன் என வார இறுதிக்கு முன்பு வரை வறண்ட வானிலை நிலவும். வார இறுதி நாட்களில் மாநகரில் பரவலான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Previous

