“பெருமைக்காகவோ அல்லது மிக அதிக அளவில் சிந்தித்தோ சொல்லவில்லை, இந்த தேர்தலில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும், அதில் எந்த விதமான மாற்றுக்கருத்தும் கிடையாது,” என இன்று செய்தியாளர்களை சந்தித்த செந்தில் பாலாஜி கூறினார்.
திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி இன்று கோவை ராமநாதபுரம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக மற்றும் அக்கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் பிற கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, இந்த சட்டமன்ற தேர்தலை பொருத்தவரை கோவை தெற்கிலே நிச்சயமாக உதயசூரியன் வெற்றி பெறும் என கூறினார்.
கோவையில் இருக்கக்கூடிய திமுக தொண்டர்களுக்கு வாய்ப்பு வழங்காமல் கரூரில் இருக்கக்கூடிய ஒருவருக்கு வாய்ப்பு வழங்கியதாக எதிர்கட்சி கூட்டணியினரால் செய்யப்படும் விமர்சனம் பற்றி செந்தில் பாலாஜியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அவர், தேர்தலில் ஒரு தொகுதியில் போட்டியிட எத்தனைபேர் வாய்ப்பு கேட்டாலும் ஒருவருக்குத்தான் அது வழங்கப்படுகிறது, அந்த முடிவை எங்களுடைய தலைவர் எடுக்கிறார். அந்த வகையில் போட்டியிட ஒரு வாய்ப்பை எனக்கு தலைவர் வழங்கி இருக்கிறார் என கூறினார்.
வாய்ப்பு கிடைக்காதோருக்கு இயக்கத்திலும் அரசிலும் பிற வாய்ப்புகள் உருவாக்க தங்களின் தலைமை முடிவு செய்யும் என கூறிய அவர், திமுகவை விமர்சிக்கும் கட்சிகளில் யாருக்கெல்லாம் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதை அவர்கள் பார்த்தால் போதுமானது என கருத்து தெரிவித்தார்.
இந்த தேர்தலில் தாங்கள் யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை குறைவாகும் நினைக்கவில்லை என கூறிய அவர், தங்களுடைய கவனம் முழுக்க மக்களை சந்தித்து வாக்குகளை கேட்டு ஆதரவை பெறுவதில் தான் உள்ளது என்றார்.என சொல்வது, திமுக அரசு செயல்படுத்திய திட்டங்களை பெற்ற வாக்காளர்கள் தங்களுக்கு கொடுத்துள்ள நம்பிக்கையை வைத்து தான் எனக் கூறினார்.

