தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் முன்னணி காலணி நிறுவனமாக திகழும் வாக்கரூ நிறுவனம், 1000க்கும் மேற்பட்ட புதிய காலணி மாடல்களை அறிமுகப்படுத்தி, தங்களது பிராண்டை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

கோவை சரவணம்பட்டியில் உள்ள குளோபஸ் அரங்கில் நடைபெற்ற கண்காட்சியில், கோடை பருவத்திற்கு உரித்தான வாக்கரூ பிளஸ் மற்றும் வாக்கரூ பிளஸ் பிளஸ் அர்பனோஸ்: ஆர்க் சப்போர்ட் மற்றும் எர்கனாமிக் காலணிகள், பாதங்களுக்கு ஏற்ப வசதியையும் ஸ்டைலையும் வழங்கும் புதிய டிசைனில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

1 42 2 40

இணையத்தில் இளைஞர்களை பெரிதும் ஈர்க்கும் வகையில் வாக்கரூ பிளிப் – ப்ளாப்ஸ் என்ற நவீன இவிஏ மாடல்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், “உங்கள் பாதத்தை அறிந்து கொள்ளுங்கள்” என்ற புதுமையான முயற்சியுடன், வாக்கரூ ஸ்போர்ட்ஸ் புதிய அதிநவீன தொழில்நுட்ப ஷூ மாடல்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இவை, அழகான வடிவமைப்புடன், ஒவ்வொரு மனிதரின் பாததிற்கு ஏற்ப காலணிகளை உருவாக்குவதில் வாக்கரூ சிறந்த கவனம் செலுத்தி வருகிறது.

5 22 4 26

இதுகுறித்து, வாக்கரூ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நவ்ஷாத் கூறுகையில், “தமிழ்நாட்டில் எங்கள் பிராண்டிற்கு சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால், தமிழக மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகின்றோம். எங்களின் ஸ்டைலான காலணிகள் இன்றைய இளைஞர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. மக்கள் மத்தியில் வாக்கரூ நிறுவனத்தின் ஸ்டைலிஷ் மற்றும் கம்ஃபர்டபிள் காலணிகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் எங்கள் உற்சாகத்தை மேலும் அதிகரிக்கும்” என்றார்.