வி.எல்.பி ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தாய்த் தமிழ் அகாடமி, செந்தமிழ் அறக்கட்டளை, கண்ணன் ஹோமியோபதி மருத்துவ மையம், வி ஆர் என் லாஜிஸ்டிக்ஸ், லயன்ஸ் கிளப் ஆப் கோயம்புத்தூர், ஆனந்த அகிலம், நிழல் மையம், தென்றல் காமன் வெல்ஃபேர் டிரஸ்ட், கஜா மலர் டிஸ்கோ டெக்கரேட்டர்ஸ், உயிர் அமைப்பு, சத்குரு டிரஸ்ட் ஆகிய அமைப்புகள் இணைந்து “விபத்தில்லா கோயம்புத்தூர்”  விழிப்புணர்வு மாரத்தான்  போட்டியை நடத்தியது.

இதில் சாலைப் பாதுகாப்பு மற்றும் விபத்துத் தடுப்பு குறித்த விழிப்புணர்வைப் பரப்பும் வகையில், பல்வேறு தரப்பட்ட மக்களும் கலந்து கொண்டனர்.

விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை வி.எல்.பி ஜே அறக்கட்டளை நிறுவனர் சூரியகுமார் துவக்கி வைத்தார். சத்குரு அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சுதாகர் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் டாக்டர் பி. சதீஷ்குமார் விளையாட்டு வீரர்களையும் மாரத்தானில் பங்கு பெற்றவர்களையும் பாராட்டினார்.

கோவை மாநகராட்சி  காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், மாரத்தான் போட்டியை துவக்கி வைத்தார்.. மாரத்தான் ஓட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் பரிசுகளை வழங்கினார். மேலும் விபத்தில்லா நகரத்தை உருவாக்க சாலை விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.