விவேகானந்தா மேலாண்மை கல்வி நிறுவனத்தில் காம்பிஸ்டா எனும் மாணவர் சங்க துவக்க நிகழ்ச்சி  நடைபெற்றது.

நிகழ்ச்சியில், ரூட்ஸ் நிறுவனத்தின் மனிதவள மேம்பாடு இயக்குநர் சிந்தனை கவிஞர் கவிதாசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களிடம் சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், லட்சியம் இல்லாத வாழ்க்கை துடுப்பில்லா படகை போன்றது என்பதால் கல்லூரி நாட்களில் மாணவர்கள் குறிக்கோளை தீர்மானித்துக் கொள்ளுங்கள். புத்தகத்தை தாண்டிய கற்றல் மிகவும் அவசியம். பிறரிடம் இருந்து கற்றுக் கொள்வது, ஆழமான சிந்தனைத் திறன்கள் ஆகியவற்றை வளர்த்துக் கொண்டால்தான் இன்றைய நிலையில் போட்டிகள் நிறைந்த துறைகளில், எதிர்நீச்சல் போட முடியும்.

மேலும் பிறரிடம் அணுகுமுறை தைரியம், திறன், அர்ப்பணிப்பு , படைப்பாற்றல் ஆகிய குணநலன்கள் ஒருவரை உயர்த்தும் என்பதால் தினமும் புதுப்புது விசயங்களை கற்றுக் கொள்வதை செயல்படுத்துங்கள். தோல்வியில் இருந்தே வெற்றியை நோக்கி பயணிக்க முடியும் என்பதால் மனம் தளராமல் முயன்றுகொண்டே இருங்கள். தன்னம்பிக்கையுடன் தகுதியை வளர்த்துக் கொள்ளுங்கள்.

உங்கள் வாழ்க்கையை தீர்மானிப்பவர் நீங்களே. இவ்வாறு கூறினார்.

இந்த ஆண்டிற்கான மாணவர் சங்கத்தின் தலைவர், துணைத் தலைவர், செயலர் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பொறுப்பேற்றுக் கொண்டனர். கல்லூரி இயக்குநர் வளர்மதி, பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.