வேலூர், விஐடி உதவி துணை தலைவர் காதம்பரி எஸ்.விசுவநாதனின் பிறந்தநாளை முன்னிட்டு, பார்வைத்திறன் குறைபாடு உடையவர்கள், முதியோர் இல்லங்களில் பராமரிக்கப்படுபவர்களுக்கு கட்டில், மெத்தை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

விஐடி உதவி துணை தலைவரான காதம்பரி எஸ்.விசுவநாதனின் பிறந்தநாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

விஐடி வேந்தர் கோ.விசுவநாதன், துணை தலைவர் சங்கர் விசுவநாதன், ரமணி பாலசுந்தரம் மற்றும் ஆசிரியர்கள், ஊழியர்கள், பணியாளர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

அவரது பிறந்தநாளை முன்னிட்டு, பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் மக்கள் களப்பணி இயக்கம் டாக்டர் ரவிசங்கர் குழுவினரிடம் பார்வைத்திறன் குறைபாடு உடையவர்களுக்கு 50 ஊன்றுகோல்களும், முதியோர் இல்லத்தில் தங்கியுள்ள 15 முதியவர்களுக்கு மெத்தைகளுடன் கூடிய படுக்கைகள் வழங்கப்பட்டன.

VIT scaled

அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள 10 அரசு பள்ளிகளுக்குத் தேவையான கழிப்பறை பக்கெட்டுகள், குவளைகள் மற்றும் குப்பைத் தொட்டிகள் வழங்கப்பட்டன.

வேலூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் பயன்பாட்டிற்கென கட்டில்கள், படுக்கைகள், தலையணைகள் அரசு மருத்துவமனையின் இருப்பிட மருத்துவர் ரவிச்சந்திரனிடம் வழங்கப்பட்டன.

தொடர்ந்து சி.எம்.சி மருத்துவமனையில் நரம்பியல் பிரிவில் பிசியொதெரபி சிகிச்சைக்காக சுமார் 3 ஆண்டுகளுக்கு சிறுமி வர்ஷாவுக்கு ரூ.25,000 மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.

உதவும் உள்ளங்கள் அமைப்பின் சந்திரசேகரிடம் படுக்கையில் உள்ள 10 நோயாளிகளுக்குத் தேவையான டயப்பர்கள் வழங்கப்பட்டன. முதியோர் இல்லத்திற்கு 10 நடைபயிற்சி உபகரணங்களும், நீர் புகாத படுக்கை விரிப்புகள் வழங்கப்பட்டன.

இதுதவிர 10 வயது சிறுவனின் கண் சிகிச்சைக்கு தேவையான சொட்டு மருந்து, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட நோயாளிக்கு தேவையான மருந்துகள், பார்வைத்திறன் குறைபாடு உடையவரின் மகளுக்கு தேவையான மருத்துவ உதவிகளும் வழங்கப்பட்டன.

ரைஸ் மறுவாழ்வு மையம், கே.வி. சிறப்பு பள்ளி, சிசு பவன், நிர்மல் இல்லம், அன்பு இல்லம், பெத்தேல் இல்லம், பிரியதர்ஷினி சிறப்பு பள்ளி, ஆத்திச்சூடி சிறப்புப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்குச் சிறப்பு கல்விப் பொருட்கள் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. மேலும், இளம் இந்திய அமைப்பு சார்பில் ஹெல்மெட் மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டன.