கோவை கள்ளிப்பாளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட அனுஸ்ரீ வரிஷ்டா கார்டன் பகுதியில், முதலாம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில் பக்தர்களுக்கு மூன்று வேளையும் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் தேரோட்ட நிகழ்ச்சி நடத்தப்பட்டு, விநாயகர் சிலை கரைக்கப்பட்டது. மேலும் குழந்தைகளுக்கான விளையாட்டு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டன.
