கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. பாரம்பரிய முறைப்படி விநாயகர் சிலை வைத்து பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து துதிப்பாடல்கள் பாடப்பட்டன. பின்னர் மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் கீதா, நிர்வாக இயக்குநர் காயத்ரி அனந்தகிருஷ்ணன் கலந்துக்கொண்டனர்.
