‘வருகிறார் உதய சூரியன்’ என்ற தலைப்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் சாதனை விளக்க பிரச்சாரப் பாடலை திமுக தலைமை கழக சொற்பொழிவாளர் புதுக்கோட்டை மதியழகன் எழுதி, பாடியுள்ளார்.

இதுகுறித்து மதியழகன் கூறுகையில்: திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு ஏராளமான திட்டங்களை கொண்டுவந்து இந்தியாவுக்கே முன்னோடியாக முதலமைச்சர் ஸ்டாலின் விளங்குகிறார். இந்தியாவிலேயே சிறந்த முதலமைச்சராக திகழ்கிறார். இதை ஒரு பாடல் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற ஆவலில் தான் இப்பாடல் உருவானது.

முதல்வரைப் பற்றி இது என்னுடைய இரண்டாவது பாடல் ஆகும். முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்றபோது ‘உதயசூரியன் உதித்து விட்டார்’ என்ற முதல் பாடலை எழுதி, பாடினேன். தற்போது வருகிறார் உதயசூரியன் என்ற பாடலை எழுதி பாடியுள்ளேன்.

இதற்கு அடுத்ததாக முதல்வரின் கட்சி பணி, அரசியல் வாழ்க்கை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அரசியல் பயணம், ‘கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே’ என்ற பாடலின் ட்யூனில் கலைஞரின் சாதனைகள் என மூன்று பாடல்களை தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறினார்.