மாணவர்களுக்கு உயர்தரமான கல்வி எளிதில் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் துவக்கப்பட்ட டாக்டர் என்.ஜி.பி. ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் கீழ் பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
தற்போது கேம்பிரிட்ஜ் சர்வதேச பாடத்திட்டத்தை அளிக்கும் வேன்கார்டு அகாடமி என்ற பெயரில் ஒரு புதிய பள்ளி கட்டிடம் காளப்பட்டியில் துவங்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துகொண்டு புதிய பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்தார்.
கே.எம்.சி.ஹெச் & டாக்டர் என்.ஜி.பி. ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் நல்ல ஜி. பழனிசாமி, அறக்கட்டளையின் துணைத் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் டாக்டர் தவமணி தேவி பழனிசாமி, கே.எம்.சி.ஹெச் செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி ஆகியோர் திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் மேயர் ரங்கநாயகி, பள்ளிக் கல்வித்துறை தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் மாநில துணைத் தலைவர் முத்துக்குமார், மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக், வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவை முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி, மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) புனிதா அந்தோனியம்மாள் மற்றும் அறக்கட்டளையின் முதன்மைச் செயல் அலுவலர் புவனேஸ்வரன் உள்ளிட்டோர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

வேன்கார்டு அகாடமியின் சிறப்புகள்
வேன்கார்டு அகாடமி கேம்பிரிட்ஜ் சர்வதேச பாடத்திட்டத்தை மாணவர்களுக்கு அளிக்கவுள்ளது. CAIE, CIPP, CLDP, IGCSR, AS மற்றும் A லெவல் முதலான பிரிவுகளில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும்.
அறிவு, ஆற்றல் மற்றும் நற்பண்புகளுடன் மாணவர்களை வழிநடத்தி, அவர்களை வருங்கால தலைவர்களாகவும், சாதனையாளர்களாகவும் உருவாகிடத் தேவையான அனைத்து பயிற்சிகள் மற்றும் வசதிகள் செய்து தரப்படும்.

2025 – 26 கல்வியாண்டில் சிறுகுழந்தைகளுக்கான சேர்க்கை விரைவில் துவங்கும் எனவும், 2026 – 27 கல்வியாண்டில் 8-ம் வகுப்பு வரை சேர்க்கை நடைபெறும் எனவும் பள்ளி நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
