இந்திய தொழில் வர்த்தக சபை கோயம்புத்தூர் மண்டலத்தின் சார்பில், 2017 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் “உழவே தலை” என்ற விவசாய கருத்தரங்கு, இந்த ஆண்டும் எதிர்வரும் ஜூலை 13, 2025 ஞாயிற்றுக்கிழமை கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில் நடைபெறவுள்ளது. இது 7வது பதிப்பாகும்.
இது குறித்தான பத்திரிகையாளர் சந்திப்பு வெள்ளிக்கிழமை (11.7.2025) நடைபெற்றது. இதில் இந்திய தொழில் வர்த்தக சபையின் தலைவர் ராஜேஷ் பி. லுந்து, கௌரவ செயலாளர் பிரதீப், துணைத் தலைவர் துரைராஜ், விவசாய பிரிவு உறுப்பினர் மணி சுந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, நிகழ்வின் முக்கியத்துவம், உள்ளடக்கம் மற்றும் விவசாயிகளுக்கான பயன்கள் குறித்து விளக்கமளித்தனர்.
