7 வயதைக் கடந்த குழந்தைகளின் ஆதாரில் பயோமெட்ரிக் விவரங்களைப் புதுப்பிக்காவிட்டால் ஆதார் முடக்கப்படும் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது.

5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ப்ளூ நிற ஆதார் அட்டை வழங்கப்பட்டு வருகிறது. 7 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் இந்த ஆதார் கார்டுகளை பயன்படுத்தி வந்தால் கைரேகை, கருவிழி, புகைப்படம் போன்ற விவரங்களை உடனடியாக புதுப்பிக்க அறியுறுத்தப்பட்டுள்ளது. அருகில் உள்ள இ-சேவை மையங்கள், அங்கீகரிக்கப்பட்ட ஆதார் மையங்களில் இந்த தகவல்களைப் புதுப்பிக்கலாம்.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் புகைப்படம், பெயா், பிறந்த தேதி, பாலினம், முகவரி, பிற ஆவணங்களை சமா்ப்பித்து ஆதார் பெறப்படுகிறது. அப்போது குழந்தைகளின் கைரேகை, கருவிழி பதிவுகள் பெறப்படுவதில்லை.

5 வயது பூா்த்தி செய்தவுடன் அவா்களின் கைரேகை, கருவிழிகள், புகைப்படத்தை ஆதாரில் பதிவேற்றம் செய்வது கட்டாயம்.  7 வயதுக்கு மேல் ஆதாரை புதுப்பிப்பிக்க ரூ.100 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. 7 வயதைக் கடந்த பின்னும் பயோமெட்ரிக்  விவரங்களை புதுப்பிக்காவிட்டால் ஆதாா் முடக்கப்பட வாய்ப்புள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.