கோவை மாநகராட்சி 88 வது வார்டில் அடிப்படை வசதி செய்து தரக் கோரி, தவெகவினர் மேயரிடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில், தால் ஃபேக்டரி வீதியில் சாக்கடை மிகவும் மோசமாக உள்ளதால் சாக்கடை புதுப்பித்து பின்னர் புதிய தார் சாலை அமைத்து தர வேண்டும். பொது குழாய்கள் டேப் இல்லாமல் பல இடங்களில் உள்ளதால் தண்ணீர் வீணாக்கி கொண்டிருக்கிறது, இதை சரி செய்து தரவேண்டும்.

TVK 2

பாலக்காடு மெயின் ரோட்டில் ஆழியார் தண்ணீர் கடந்த ஒரு மாத காலமாக வீணாகி கொண்டிருக்கிறது இதனால் பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே உடனடியாக சரி செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.