ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரியின் மருத்துவ அறுவை சிகிச்சை செவிலியர் துறை மற்றும் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் இணைந்து ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக காசநோய் தினத்தை முன்னிட்டு காச நோயை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்ற கருத்தினை மையமாகக் கொண்டு கண்காட்சியை நடத்தின.
காசநோய் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் எடுத்துச் செல்லும் வகையில், காச நோயின் அறிகுறிகள், சிகிச்சை முறைகள், நோய் அறிதல், மற்றும் தடுப்பு முறைகள் குறித்து வரைபடம் மற்றும் செயல் விளக்கம் மூலம் மாணவர்கள் பொதுமக்களிடம் எடுத்துரைத்தனர்.