கோவை மாநகர் கணபதி பகுதியில் பி.எஸ்.என்.எல். அலுவலக வளாகம் – பிரபல பாத்திர கடை அருகே உள்ள 4 சாலை சந்திப்பு பகுதியில் டிராபிக் சிக்னல் அமைப்புகள் இருந்தும் அவை இயங்காத காரணத்தால் சாலையை கடக்க பாதசாரிகள், வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகின்றனர்.

கனரக வாகனங்கள் பலவும் இந்த வழியை பயன்படுத்துகின்றன. எனவே இங்கு போக்குவரத்தை கண்காணிக்க, அதை எளிதாக்க நடவடிக்கை தேவை.
மேலும் கணபதியின் பிரதான பகுதியான சூர்யா மருத்துவமனை அருகே வரக்கூடிய சாலை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புது டிராபிக் சிக்னலையும் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவந்தால் வாகனங்கள் முறையின்றி செல்வதை தடுக்கவும், பாதசாரிகள் பாதுகாப்புடன் சாலையை கடக்கவும் உதவியாக இருக்கும்.

