கோவையில் டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனையின் 2வது புதிய கிளை சிங்காநல்லூர் திருச்சி சாலையில் தொடங்கப்பட்டுள்ளது.
சிறப்பு விருந்தினராக பங்கேற்று, புதிய கிளையை மேயர் ரங்கநாயகி திறந்து வைத்தார். கோவை நகரக் காவல்துறை ஆணையர் சரவண சுந்தர், இந்திய மருத்துவ சங்கத்தின் கோவை கிளை செயலாளர் டாக்டர் சீதாராமன் உடன் பங்கேற்றனர்.
இந்த மருத்துவமனை தலைமை டாக்டர் ஸ்ரீதரன், நிர்வாக இயக்குநர் டாக்டர் சுனில் ஸ்ரீதர், தலைமை மருத்துவ இயக்குநர் டாக்டர் மிருதுளா சுனில் ஆகியோரின் தலைமையில் செயல்பட்டு வருகிறது. கோவை கிளை மருத்துவ சேவை டாக்டர் மும்தாஜ், டாக்டர் மதுசூதன் ஆகியோர் தலைமையில் செயல்பட்டு வருகிறது.
டாக்டர் ஸ்ரீதரன் கூறும்போது: சிங்காநல்லூரில் 6500 சதுர அடியில் அமைந்துள்ள புதிய மருத்துவமனை, அதிநவீன மருத்துவ வசதிகளுடன் 14 நர்சிங் ஊழியர்கள், கண் சிகிச்சை நிபுணர்களுடன் செயல்பட உள்ளது. மருத்துவ ஆலோசனை மையங்கள், கண் பரிசோதனை, மருந்தகம், அறுவை சிகிச்சை மையம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளது.
ஜெனரல் ஆப்தால்மாலஜி, கண்புரை, குளுக்கோமா, மெடிக்கல் ரெடினா, லேசிக், கார்னியா சிகிச்சை, குழந்தைகள் கண் சிகிச்சை மருத்துவர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் செயல்படுகின்றன. தொடக்க விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 15 வரை அனைவருக்கும் இலவச ஆலோசனையும், 100 நபர்களுக்கு இலவச கண்புரை அறுவை சிகிச்சையும், 400 நபர்களுக்கு இலவச கண் கண்ணாடியும் வழங்கப்பட உள்ளது.
