கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் குரூப் 4 தேர்வை ஐம்பதாயிரம் பேர் எழுதுகின்றனர்.
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் குரூப் 4 நிலையில் காலியாக உள்ள 3,935 பணி இடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் சார்பில் இன்று நடக்கிறது.
இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பணி இடங்களை நிரப்ப நடத்தப்படும் இந்த தேர்வை எழுத மாநிலம் முழுவதும் 13 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். கோவை மாவட்டத்தில் தேர்வு எழுத 50,144 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்கள் தேர்வு எழுத வசதியாக 100 க்கும் மேற்பட்ட தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேர்வர்கள் காப்பியடிப்பதை தடுக்க 175 தனி படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் தவிர அரை கண்காணிப்பாளர் உள்பட 1000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்வு காலை 9:30 மணிக்கு தொடங்கி பிற்பகல் 12:30 மணி வரை நடக்கும்.
அந்த வகையில் கோவை தூய மைக்கல் மேல்நிலை பள்ளியில் 300 பேர் தேர்வு எழுதுகின்றனர். அதில் 7 மாத கைக் குழந்தையுடன் தேர்வு எழுத வந்த ராமநாதபுரம் சுங்கம் பகுதியைச் சேர்ந்த லீஜா குழந்தையை அவரது பெற்றோரிடம் கொடுத்துவிட்டு தேர்வு எழுதச் சென்றார்.
