2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. இதனை ஒட்டி அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ளன.

அரசியல் அரங்கில் முக்கியத்துவம் பெற்ற கோவை மாவட்டத்திலும் தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டி வருகிறது. அந்த வகையில், பல கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் ஒவ்வொரு நாளும் பொதுமக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.

கோவையைப் பொறுத்தவரை அதிமுக பலம் வாய்ந்ததாக கருதப்படும் நிலையில், திமுக அதனை கைப்பற்ற முயற்சி எடுத்து வருகிறது. இதற்காக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி களமிறக்கப்பட்டுள்ளார்.

அதேபோல, முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் தலைமையில் களம் இறங்கும் அதிமுக வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்த பலர் இம்முறை மீண்டும் போட்டியிடுவதால் கோவையில் அதிமுகவுக்கு சாதகமான நிலை இருப்பதாக பிரச்சாரங்களின் போது தெரிகிறது.

மேலும், கடந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக சார்பில் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வானதி சீனிவாசன் இம்முறை கோவை வடக்கில் போட்டியிடுகிறார்.

IMG 20260405 WA0029

இந்நிலையில், சுண்டக்காமுத்தூர் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு இருந்த  தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் எஸ்.பி.வேலுமணியை, வானதி சீனிவாசன் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.