தந்தை பெரியாரின் 51வது – நினைவு நாளை முன்னிட்டு கோவை வடக்கு மாவட்டம், குனியமுத்தூர் பகுதி, சுண்ணாம்புகால்வாய் பகுதியில் அமைந்துள்ள தந்தை பெரியார் திருவுருவ சிலைக்கு, கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் அ.ரவி மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
உடன், குனியமுத்தூர் பகுதி செயலாளர் லோகநாதன், கரும்புக்கடை பகுதி செயலாளர் ஜெய்லாபுதீன், செல்வபுரம் பகுதி செயலாளர் கேபிள் மணி, பேரூர் தலைவர் அண்ணாதுரை, வேடப்பட்டி தண்டபாணி, தாளியூர் தண்டபாணி, சிறுபான்மையினர் அணி அமைப்பாளர் உசேன், ஆதிதிராவிடர் நல அமைப்பாளர் சென்னை சிவா, வட்டக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள்.