தைப்பூசத்தையொட்டி, மருதமலை மலைப் பாதையில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூசத் திருநாளையொட்டி, ஜனவரி 26ல் கொடியேற்றம், ஜனவரி 31ம் தேதி வள்ளி தெய்வாணை உடனமா் சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம், பிப்ரவரி 1ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு தைப்பூசத் தேரோட்டம், தோ் திருவீதி உலா வருதல் நிகழ்வு நடைபெறகிறது. பிப்ரவரி 2ம் தேதி தெப்பத் திருவிழா, பிப்ரவரி 3ல் கொடியிறக்குதல், பிப்ரவரி 4ம் தேதி வசந்த உற்சவம் நிகழ்ச்சி நடைபெறும்.

எனவே ஜனவரி 30 முதல் பிப்ரவரி 2 வரை  மலைக்கோவிலுக்கு நான்கு மற்றும் இருசக்கர வாகனங்கள் செல்வதற்கு பக்தா்களுக்கு அனுமதி இல்லை. பக்தா்கள், மலைப்படிகள், கோவில் பேருந்துகள் மூலமாக சென்று சுவாமி தரிசனம் செய்யலாம். பிப்ரவரி 5ம் தேதி முதல் வழக்கம்போல இரவு 7 மணி வரை பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவாா்கள்.