சுகுணா கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தின விழா, நேரு நகர் சுகுணா கல்வி நிறுவன வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரியின் தலைவர் லட்சுமி நாராயணசாமி, தாளாளர் சுகுணா லட்சுமி நாராயணசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் சுகுணா கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஏராளமானோர் பங்குபெற்றனர். இதில் ஆசிரியர்களின் நடன நிகழ்ச்சி நடைபெற்றன. அறுசுவை உணவுகளும், பரிசுகளும் வழங்கப்பட்டன.
சுகுணா கலை அறிவியல் கல்லூரியின் செயலாளர் ஸ்ரீகாந்த் கண்ணன், இயக்குனர் சேகர், முதல்வர் ராஜ்குமார், பள்ளி, கல்லூரிகளின் இயக்குனர்கள், முதல்வர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்
