கோவை மாநகராட்சியில் பிப்ரவரி 14, 15 ஆகிய தேதிகளில் சிறப்பு வரிவசூல் முகாம்கள் நடைபெற உள்ளது என மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2025-2026 இரண்டாம் அரையாண்டு வரை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, காலியிடவரி, தொழில்வரி மற்றும் குடிநீர் கட்டணம் ஆகிய வரியினங்களை பொதுமக்கள் செலுத்துவதற்கு வசதியாக அனைத்து மண்டல வரிவசூல் மையங்கள் மற்றும் சிறப்பு வரிவசூல் முகாம்கள் பிப்ரவரி 14, 15 ஆகிய தேதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை (அரசு விடுமுறை நாட்கள் தவிர) வரிவசூல் பணிகள் நடைபெறும்.

முகாம் நடைபெறும் இடங்கள்

கிழக்கு மண்டலம் – 5வது வார்டில் விசுவாசபுரம் – ரேஷன் கடை, 51வது வார்டில் ஆர்.ஆர் தர்ஷன் அப்பார்ட்மெண்ட் – பாரதி புரம், 55வது வார்டில் மாநகராட்சி ஆரம்பப்பள்ளி , SIHS காலனி, 56வது வார்டில்          சுங்கம் மைதானம், ஒண்டிபுதூர்.

மேற்கு மண்டலம் – 34வது வார்டில் கற்பக விநாயகர் கோவில், மஞ்ஜேஸ்வரி காலனி,  கவுண்டம்பாளையம் (சனிக்கிழமை மட்டும்), 39வது வார்டில் பெருமாள் கோவில், சுண்டப்பாளையம் (ஞாயிற்றுக்கிழமை மட்டும்).

வடக்கு மண்டலம் – 15வது வார்டில் சுப்பிரமணியம் பாளையம் வார்டு அலுவலகம் அருகில், 19வது வார்டில் மணியகாரம்பாளையம் அம்மா உணவகம், 25வது வார்டில் காந்திமாநகர் வார்டு அலுவலகம், செல்வ விநாயகர் கோவில் லைன், 28வது வார்டில் ஆவராம்பாளையம் வார்டு அலுவலகம்.

தெற்கு மண்டலம் – 88வது வார்டில் தர்மராஜா கோவில் மண்டபம். குனியமுத்தூர், 96வது வார்டில் கோயம்புத்தூர் மாநகராட்சி ஆரம்பப்பள்ளி. குறிச்சி.

மத்திய மண்டலம் – 32வது வார்டில் சிறுவர் பூங்கா, நாராயணசாமி வீதி, சங்கனூர் (சனிக்கிழமை மட்டும்), 63வது வார்டில் மாநகராட்சி வணிக வளாகம், பெருமாள் கோவில் வீதி, ராமநாதபுரம்.