டேனி ஷெல்டர்ஸ் நிறுவனம் மற்றும் சீயோன் அறக்கட்டளையின் சார்பில் மேட்டுப்பாளையம் சாலையில் சங்கனூர் பாலம் முதல் துடியலூர் வரையுள்ள சென்டர் மீடியனில் ‘கானகம்’ என்ற திட்டத்தின் கீழ் மரக்கன்று நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கோவை ஆட்சியர் பவன்குமார், டேனி ஷெல்டர்ஸ் நிர்வாக இயக்குனர் சிவராமன் கந்தசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் மொத்தம் 5,000 மரக்கன்றுகள் நடப்படுகிறது.

“டேனி ஷெல்டர்ஸ் நிறுவனத்தின் சி.எஸ்.ஆர் பங்களிப்பின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த திட்டம், கோவையை பசுமையாக மாற்றுவதை நோக்கமாக கொண்டுள்ளது” என சிவராமன் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

