தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி விட்டது. இதை முன்னிட்டு தமிழக சட்டப்பேரவையில், 2026 -2027 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார்.
இதில் எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதன் விவரம் பின்வருமாறு:
- பள்ளி கல்வித்துறைக்கு ரூ.48 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
- உயர் கல்விக்கு ரூ.8,505 கோடி ஒதுக்கீடு
- காலை உணவுத் திட்டம் 1884 கோடி ஒதுக்கீடு
- மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு ரூ. 1,471 கோடி ஒதுக்கீடு
- சிறப்பு திட்ட செயலாக்கத்துறை ரூ.17,088 கோடி ஒதுக்கீடு
- சமூக நலத் திட்டங்களுக்கு ரூ.5,463 கோடி ஒதுக்கீடு
- தொழிலாளர் நலத்துறைக்கு ரூ.1,996 கோடி ஒதுக்கீடு
- மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ரூ. 22,090 கோடி ஒதுக்கீடு
- இளைஞர் நலன், விளையாட்டு துறைக்கு 718 கோடி ஒதுக்கீடு
- ஊரக வளர்ச்சி துறைக்கு ரூ.28,687 கோடி ஒதுக்கீடு
- நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் – ரூ.28,821 கோடி ஒதுக்கீடு
- தொழில்துறைக்கு ரூ.4,882 கோடி ஒதுக்கீடு
- சிறு குறு நடுத்தர தொழில் நிறுவன துறைக்கு ரூ.1,943 கோடி ஒதுக்கீடு
- தகவல் தொழில்நுட்பத்துறைக்கு ரூ. 219 கோடி ஒதுக்கீடு
- தமிழ்நாடு செமி கண்டகர் மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு
- நீவளத் துறைக்கு ரூ.4,882 கோடி ஒதுக்கீடு
- எரிசக்தி துறைக்கு ரூ.18.091 கோடி ஒதுக்கீடு
- தமிழ்நாடு மின் துறை ரூ.18,091 கோடி ஒதுக்கீடு
- போக்குவரத்து தூறை ரூ.13,062 கோடி ஒதுக்கீடு
