தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பயிர் நோயியல் துறை சார்பாக ஒவ்வொரு மாதமும் காளான் வளர்ப்பு சம்பந்தமான ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது. டிசம்பர் 2025 மாதத்திற்கான பயிற்சி வரும் 5ம் தேதி அளிக்கப்படுகிறது.
பயிற்சியில் கலந்துகொள்ள விரும்புவோர் பயிற்சி நாளன்று பயிர் நோயியல் துறையில் பயிற்சிக் கட்டணமான ரூ.850 செலுத்தி பதிவு செய்து பங்கேற்கலாம். கல்லூரி மாணவர்களுக்கு ரூ.590 (அடையாள சான்று அவசியம்). பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
பயிற்சி நேரம்: காலை 10.00 முதல் மாலை 5.00 மணி வரை.
மேலும் விபரங்களுக்கு
தொலைபேசி: 0422-6611336, 0422-6611226
அலைபேசி: 9629496555; 6379298064
மின்னஞ்சல்: [email protected]
