சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மகளிர் தின விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக சுகுணா கல்வி குழுமத்தின் இயக்குநர் சாந்தினி அனீஷ்குமார், வழக்கறிஞர் திவ்யா நடராஜ், எம்.சி.வி. காது மூக்கு தொண்டை நிபுணர் மருத்துவர் ஸ்ரீதுர்கா ஆகியோர் கலந்து கொண்டு, பெண்கள் சமூகத்தில் ஆற்றும் முக்கிய பங்கு, பெண்களின் முன்னேற்றம் மற்றும் அவர்களுக்கு கிடைக்கும் சட்ட பாதுகாப்புகள் குறித்து மாணவிகளுடன் கலந்துரையாடினர்.

நிகழ்வில் கல்லூரியின் செயலாளர் ஸ்ரீகாந்த் கண்ணன், கல்லூரியின் இயக்குநரும் செயலருமான சேகர், கல்லூரி முதல்வர் ராஜ்குமார், பேராசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.