சுகுணா கலை அறிவியல் கல்லூரியின் 6வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது.
கல்லூரியின் தாளாளர் லட்சுமி நாராயணசாமி விழாவிற்கு தலைமை தாங்கினார். தலைவர் சுகுணா லட்சுமி நாராயணசாமி குத்துவிளக்கு ஏற்றி விழாவைத் தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் ராஜ்குமார் வரவேற்புரை வழங்கினார்.
செயலாளர் ஸ்ரீகாந்த் கண்ணன், இயக்குநர் மற்றும் செயலாளர் சேகர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு விருந்தினர்களாக FACT நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சக்திமணி மற்றும் குருகுலம் இன்ஸ்டிடியூட் இயக்குநர் மயிலிறகு சுந்தராஜன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
விழாவில் கல்வியாண்டில் சிறந்து விளங்கிய மாணவர்கள் கவுரவிக்கப்பட்டனர். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மாணவர்களின் கண்கவர் நடன மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
