ஈரோட்டில் சிறப்பு அதிரடிப்படை எஸ்.பி யாக இருந்த சசி மோகன் பதவி உயர்வு பெற்று கோவை சரக டி.ஐ.ஜி யாக நியமிக்கப்பட்டார். அவர் இன்று ரேஸ்கோர்ஸில் உள்ள டி.ஐ.ஜி அலுவலகத்தில் பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.
அப்போது அவர் நிருபர்களிடம் பேசிய அவர், கோவை சரகத்தில் ஏற்கனவே சில மாவட்டங்களில் எஸ்.பி-யாக பணி புரிந்து உள்ளேன். சரகத்தில் சட்டம் – ஒழுங்கு, போக்குவரத்து, குற்ற தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். கோவை நகரையொட்டிய புறநகர் எல்லைகளில் போதைப் பொருளைத் தடுக்க ரோந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் விழிப்புணர்வு நடத்தி போதை பொருளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
புதியதாகப் பொறுப்பேற்றுக் கொண்ட டி.ஐ.ஜி சசிமோகனுக்கு கோவை மாவட்ட எஸ்.பி கார்த்திகேயன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.