கோவையில் பாஜக சார்பில், இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் மற்றும் பாஜக மாநில விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவுத் துறை தலைவர் நயினார் பாலாஜி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் சரசுவதி கண்ணையன், பாஜக நிர்வாகிகள் பங்கேற்றன. போட்டியில் தமிழ்நாடு முழுவதிலுமிருந்து சதுரங்க வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

