இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உடற்கல்வி துறை மற்றும் தமிழ்நாடு கேரம் அசோசியேஷன்ஸ் மற்றும் கோவை மாவட்ட கேரம் அசோசியேஷன்ஸ் இணைந்து 27, 28, மற்றும் 29.12.2024 ஆகிய தேதிகளில் மாநில அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கேரம் போட்டியை நடத்தி வருகின்றது. இப்போட்டியினை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் செயலாளர் சரசுவதி கண்ணையன், நிர்வாக செயலாளர் பிரியா, முதல்வர் பொன்னுசாமி ஆகியோர் இன்று(27.12.2024) வெள்ளிக்கிழமை துவக்கி வைத்தனர்.