ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, ஸ்பார்க் இன்குபேஷன் பவுண்டேஷன், மற்றும் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் இணைந்து ”இன்னோவேஷன் வவுச்சர் ப்ரோக்ராம் பண்ட்ஸ் – ஸ்டார்ட்அப் சக்ஸஸ்” என்ற தலைப்பில் சிறப்பு பயிலரங்கை நடத்தியது.
பயிலரங்கில் 50க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்கள் மற்றும் உற்பத்தி திறன் மேம்பாட்டாளர்கள் கலந்து கொண்டு, இன்குபேஷன் சென்டர் அமைப்பது, அரசு நிதி உதவிகள் பெறுவது, ஆராய்ச்சி படைப்புகளுக்கான சிறந்த யோசனைகள் ஆகிய விடயங்களைப் பற்றிய கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன திட்ட அலுவலர் காயத்திரி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, தொழில் முனைவோர் வளர்ச்சியில் இன்குபேஷன் மையங்கள் வழங்கும் ஆதரவுகள் குறித்து தனது கருத்துக்களை முன்வைத்தார்.
விழாவில் கல்லூரி முதல்வர் சௌந்தரராஜன், எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் கல்வித்துறை இயக்குநர் என்.ஆர். அலமேலு, ஸ்பார்க் இன்குபேஷன் பவுண்டேஷன் தலைமை இயக்க அதிகாரி பேராசிரியை ஷர்மிளா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, தொழில் முனைவோருக்கான வழிகாட்டல் மற்றும் ஆதரவின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினர்.
