ஸ்ரீகுமரன் தங்க மாளிகையின் 51வது கிளை காஞ்சிபுரத்தில் புதன்கிழமையன்று கோலாகலமாக திறக்கப்பட்டது.

ஸ்ரீகுமரன் தங்க மாளிகையின் மேலாண்மை இயக்குநர் டி.கே.சந்திரன் புதிய கிளையை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நிறுவனத்தின் இயக்குநர்கள் கே.விநாயகம், மீனாட்சி விநாயகம், நந்தகோபால், செயல் இயக்குநர் விக்ரம் நாராயண் மற்றும் அகஷ்யா விக்ரம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

முதல் விற்பனையை நிர்வாக இயக்குநர் மாணிக்கம் துவக்கி வைத்தார். அதனை, அக்னி ஸ்டீல் உரிமையாளர் குணசுந்தரி தங்கவேல், ஐஸ்வர்யா இளங்கோவன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.