ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரிக்கு 2024-25 ஆம் கல்வியாண்டில் மாணவர்களின் கல்வி மற்றும் பிற செயல்பாடுகளின் அடிப்படையில் “சிறந்த பங்களிப்பாளர் விருதினை” ஐ.எஸ்.டி.இ அமைப்பு வழங்கியுள்ளது.

இந்தியன் சொசைட்டி ஃபார் டெக்னிக்கல் எஜுகேஷன் (ஐ.எஸ்.டி.இ) என்பது இந்திய தொழில்நுட்பக் கல்விக்கான ஒரு அமைப்பாகும். இவ்வமைப்பானது ஆசிரியர்களின் பணி மேம்பாடு, மாணவர்களின் ஆளுமை மேம்பாடு மற்றும் தொழில்நுட்ப கல்வி முறையின் வளர்ச்சி என்ற குறிக்கோளுடன் இயங்கி வருகிறது.

இந்த விருதினை தமிழ்நாடு பிரிவு தலைவர் சங்கர சுப்பிரமணியன் முன்னிலையில் “சிறந்த பங்களிப்பாளர் விருதினை” ஐ.எஸ்.டி.இ அமைப்பின் தலைவர் பிரதாப்சிங் காக்காசாகேப் தேசாய், கல்லூரி முதல்வர் கோபாலகிருஷ்ணனுக்கு வழங்கினார்.