ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் எந்திரா’2026 என்ற தலைப்பில் மாநில அளவிலான தொழில்நுட்ப போட்டிகள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில்  மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த 45 கல்லூரிகளில் இருந்து  558 பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர்.   இந்த  தொழில்நுட்ப போட்டிகள்  நான்கு பிரிவுகளாக கேட் மாடலிங் ,கோட் டி- பங்கிங் , சர்க்யூட் மற்றும் சர்க்யூட் அல்லாத பிரிவுகளில் தொழில்நுட்ப கட்டுரை சமர்ப்பித்தல் போட்டிகள் நடைபெற்றன .

மேலும் விழாவில் கல்லூரி முதல்வர் கோபாலகிருஷ்ணன் எந்திரா’2026  தொழில்நுட்ப போட்டிகள் பற்றி  விளக்க உரையாற்றினார்.   இரண்டாமாண்டு  கம்ப்யூட்டர் துறை மாணவி விசாக சிவமணி வரவேற்புரையாற்றினார். எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் முதன்மை நிர்வாக அதிகாரி  மகேஷ்குமார் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.  ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முதல்வர் சௌந்தர்ராஜன் நிகழ்ச்சியில் முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக  கொடிசியா அமைப்பின்  தலைவர் கார்த்திகேயன் கலந்துகொண்டு மாணவர்களிடையே சிறப்புரையாற்றினர், அவர் பேசும்போது, “மாணவர்கள் இதுபோன்ற தொழில்நுட்ப கருத்தரங்குளில் கலந்துகொள்வதன் மூலம்  தங்களின் தொழில்நுட்ப அறிவினை வளர்த்துக்கொள்ள முடியும். மேலும் ஒவ்வொருவரும்  தொழில் நிறுவனங்களை  துவங்கி தொழில்முனைவோராக வளர்வதுடன் அவற்றின்   முன்னேற்றத்தில் மிகுந்த  கவனமுடன்  ஈடுபட  வேண்டும் என்றார்”.

பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ ,மாணவியர்களுக்கு  பரிசுத் தொகையாக ஐந்தாயிரம்,  நான்காயிரம் மற்றும் மூன்றாயிரம் உடன் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினர்.  இத்தொழில்நுட்ப போட்டிகளின் ஒருங்கிணைப்பாளராக  கம்ப்யூட்டர் துறைத்தலைவர்  ஜெகதீஸ்வரன் செயல்பட்டார். இறுதியில் முதலாமாண்டு மின்னணு மற்றும் தொடர்பியல்  துறை  மாணவி பானுமதி  நன்றி கூறினார்.