ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரியில், தைப்பொங்கல் திருநாள் கடந்த சனிக்கிழமை அன்று கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் நரேந்திரன் தலைமை தாங்கினார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பாரம்பரிய தமிழ் நாட்டுப்புற இசை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வில் கல்லூரி முதல்வர் ஸ்ரீராம், துணை முதல்வர் கோபால் ராவ், பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

