தமிழகத்தின் முன்னணி பல்நோக்கு மருத்துவமனைகளில் ஒன்றான கோவை, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை கடந்த 50 ஆண்டுகளாக கோவையில் எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையால் நடத்தப்பட்டு வருகிறது.
மருத்துவ அரங்கில் உலக அளவில் ஏற்படும் முன்னேற்றங்களை கவனித்து, இம்மருத்துவமனையில் நவீன மருத்துவ தொழில்நுட்பங்களையும், சிகிச்சை முறைகளையும் அறிமுகம் செய்து நோயாளிகளுக்கு சிறந்த முன்னேற்றங்களை சீராக வழங்கி வருகிறது. இதனால் பல ஆண்டுகளாக, மக்கள் நன்மதிப்பை பெற்ற நிறுவனங்களிடமும், தரம் மதிப்பீடு செய்யும் அமைப்புகளிடமும் இருந்து பல்வேறு விருதுகளை பெற்று வருகிறது. மேலும் இம்மருத்துவமனை தனது சிகிச்சையால் முன்னேற்றம் பெற்ற மக்களின் பாராட்டையே மிகப்பெரும் அங்கீகாரமாக கருதி வருகிறது.
இந்நிலையில் ஹைதராபாத்தில் சனிக்கிழமை (3.5.2025) நடைபெற்ற இந்தியா ஹெல்த் மாநாடு 2025 – தென்னக பதிப்பு நிகழ்வில் கொங்கு மண்டலத்தின் சிறந்த பல்நோக்கு மருத்துவமனை என்ற விருது வழங்கப்பட்டது.
இந்த விருதை, எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் அழகப்பன், தெலுங்கானா ஆளுநர் ஜிஷ்ணு தேவ் அவர்களிடம் இருந்து பெற்றனர்.
